யாழ்ப்பாணம் நவாலி மூத்தவிநாயகர் ஆலயத்திற்கு அருகில் உள்ள கிணறொன்றில் தவறி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
ஆணைக்கோட்டை பகுதியை சேர்ந்த நவரத்தினம் சுரேஷ் (வயது 32) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் கிணற்றடியில் நின்ற போது நிறை போதையில் நிலை தடுமாறி கிணற்றினுள் விழுந்த நிலையில், அங்கிருந்தவர்கள் உடனடியாக இளைஞனை மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.