பிக்பாஸ் பிரபலமான ஜிபி முத்துவை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிக டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பிரபலமாக நுழைந்தார்.
பின்பு தனது மகனின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பிக்பாஸ் வீட்டை விட்டு கதறி தர்ணா போராட்டம் செய்து வெளியே வந்தார்.
தற்போது மனைவி குழந்தைகளுடன் வசித்துவரும் ஜிபி முத்து, கடை திறப்பு, பட ப்ரொமாஷன் என பிஸியாக இருந்து வருகின்றார்.
தற்போது ஜி.பி.முத்துவை இரண்டு போலீசார் கைது செய்வது போல் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதைப் பார்த்த ரசிகர்கள் எங்கள் தலைவன் என்ன தவறு செய்தார், ஏன் கைது செய்யப்பட்டார் என புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் உண்மை என்னவென்றால் பரோல் படத்துக்காக புரமோஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜிபி முத்து.
அதில் தான் அவர் கைது செய்யப்படுவது போல் காட்சி அமைந்துள்ளது, அதைதான் ரசிகர்கள் போட்டோ எடுத்து வெளியிட்டுவிட்டனர்.