யாழில் வீதியில் திடீரென உருவான குளம்: குழப்பமடைந்த மக்கள்!

யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் வரை 786 பேரூந்து செல்லும் நவாலி – சங்கரத்தை வீதி மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது.

இவ்வழியாகச் செல்பவர்கள் அன்றாடம் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், துனாவிச் சந்தியில் பாரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதோடு, மழை நீர் தேங்கி நிற்பதால் அவ்வீதியில் பயணிக்கும் மக்கள் தினமும் அச்சத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த சாலை குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் மற்றும் காரைநகரில் இருந்து புறப்படும் வழித்தட 786 பேருந்து இவ்வழியாகச் செல்கிறது.

இந்த சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

நான்கு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் இவ்வழியாக செல்கின்றனர். மாற்றுப் பாதை இல்லாததால் இந்தப் பாதையில் பயணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், முதியவர்கள், கர்ப்பிணிகள், கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.

துணவிச் சந்திப்பில், தெரியாத அளவில் கிட்டத்தட்ட இரண்டடி பள்ளம் உள்ளது. அந்த பள்ளத்தில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இப்படி பள்ளம் இருந்தால் மக்கள் எப்படி பயணிக்க முடியும்?

இந்த சாலையில் ஒரு வாரத்தில் 4 அல்லது ஐந்துக்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. குறிப்பாக கர்ப்பிணி பெண் ஒருவரும் விபத்தில் சிக்கியுள்ளார். அன்றைய தினம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு விபத்து ஏற்பட்டால், அதற்கு யார் பொறுப்பு?

எனவே மக்களாகிய எங்களின் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த வீதியை தற்காலிகமாவது செப்பனிட வேண்டும். இல்லையெனில் இந்த சாலையில் நடக்கும் பாரிய விபத்துகளை யாராலும் தடுக்க முடியாது – என்றனர்.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad