வீதியில் பந்தய ஓட்டம் ஓடிய இ.போ.ச சாரதியால் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து கவிழ்ந்து கடந்த 21ம் திகதி மாலை விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் பணியாற்றும் அரச ஊழியரான யாழ்.சாவகச்சோி - அரசடியை சேர்ந்த ஜீவானந்தம் சுகிர்தினி(வயது-32) என்பவர் உயிரிழந்ததுடன் 17 பேர் காயமடைந்தனர்.
அதில் காயமடைந்த முள்ளிவாய்க்காலை சொந்த இடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட ரொட்மன் ரொணிக் ரொபின் (வயது-6) என்ற சிறுவனின் இரு கைகளும் காயமடைந்த நிலையில், ஒரு கை அகற்றப்பட்டிருக்கின்றது.