அத்துடன் அவருடன் தங்கியிருந்த மருத்துவ உதவியாளரான இளம் பெண்ணும் கடும் காயமடைந்ததாகத் தெரியவருகின்றது.
வைத்தியரின் கிளினிக் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்படுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அங்கு விரைந்து சென்றுள்ளனர் பொலிசார்.அதன் பின்னரே குறித்த கிளினிக்குக்குள் குடும்பச் சண்டை நடைபெறுவதை பொலிசார் கண்டுள்ளனர்.
தலை மற்றும் முகத்தில் காயங்களுக்கு உள்ளான வைத்தியரை பொலிசார் மீட்டு வெளியே கொண்டு வர முயற்சித்தும் அவர் கிளினிக்கை விட்டு வெளியே வராது பொலிசாரை திருப்பி அனுப்புவதில் குறியாக இருந்ததாக தெரியவருகின்றது.
அத்துடன் கிளினிக்கின் பாத்றுாம் பகுதி பூட்டப்பட்ட நிலையில் உள்ளே இருந்து அவலக்குரல் கேட்கவே அங்கு பொலிசார் சென்ற போது அரை குறை ஆடையுடன் வைத்தியரின் பெண் உதவியாளர் வெளியே வந்து ஓடிச் சென்று பொலிசாரின் வாகனத்துக்குள் புகுந்ததாக பொலிஸ் தரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.
பாத்ரூம் கதவுக்கு வெளியே தும்புத்தடியுடன் நின்றிருந்த வைத்தியரின் மனைவி குறித்த பெண்ணை பொலிஸ் வாகனம் வரை துரத்தித்துரத்தித் தாக்கிச் சென்ற போது பொலிசார் அதனை தடுத்து நிறுத்தியதாகத் தெரியவருகின்றது. மனைவி கொலை வெறியில் அங்கு நின்றதாகவும் கையில் அகப்பட்ட பொருட்களால் கணவனைத் தாக்கியதாகவும் பொலிசாரே அதனை தடுத்து நிறுத்தி வைத்தியரை காரில் செல்ல விட்டதாகவும் தெரியவருகின்றது.
இச் சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் வைத்தியரின் பெண் உதவியாளர் முறையிட பொலிஸ் நிலையம் சென்ற போது வைத்தியர் அங்கு வந்து குறித்த பெண்ணை தனது காரில் ஏற்றிச் சென்றுவிட்டதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனைவியை பொலிசார் விசாரணைக்கு உட்படுத்திய போது, தனது தந்தையின் மருத்துவச் சிகிச்சைக்காக தான் கொழும்பில் தங்கி நிற்கும் வேளைகளில்,தனது வயதான தாய் மற்றும் சிறு பிள்ளைகளை வீட்டில் தனியே விட்டுவிட்டு குறித்த வைத்தியர் இரவில் வீட்டில் நிற்பதில்லை என்றும் இது தொடர்பாக தனக்கு கிடைத்த தகவல்களை அடுத்து வைத்தியருக்கு தெரியாது கொழும்பிலிருந்து ரயிலில் வந்து நிலமையை அவதானித்த போது வைத்தியர் கிளினிக்கின் குறித்த இளம் பெண்ணுடன் தங்கியிருப்பதை அவதானித்ததாக வைத்தியரின் மனைவி கூறியுள்ளார்.