யாழில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 72 வயது முதியவர் பிரதேச இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த பகுதியில் பலசரக்கு கடையொன்றை நடத்தி வரும் முதியவரே கைவரிசை காண்பிக்க முயன்றுள்ளார்.
பொருள் வாங்க வந்த 10 வயது சிறுமியுடனே அத்துமீறியுள்ளார்.
கடையில் யாருமில்லாத சமயத்தில் தனியாக வந்த சிறுமியை, கடைக்குள் தள்ளிச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார். சிறுமி கூக்குரலிட்டுள்ளார்.