15 வயதான மாணவியை காணவில்லையென பெற்றோர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
மறுநாள் காலையில் காணாமல் போன மாணவியும், காதலனும் ஆட்களற்ற வீடொன்றில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிசார் அங்கு சென்று மாணவியை மீட்டனர்.
காதலியுடன் தங்கியிருந்த 23 வயதான காதலன் கைது செய்யப்பட்டார்.
15 வயதான சிறுமி விருப்பத்துடன் காதலனுடன் சென்றிருந்தாலும், சிறுமி உரிய பராயமடையாததால், பாலியல் வன்புணர்வு வழக்கை எதிர்கொள்ளும் இளைஞன், பருத்தித்துறை நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.