யாழில் 18 வயது பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த காதலனும் அவன் நண்பர்களும்.

யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவில் திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்ற ‘மிஸ் கோல்’ காதலனாலும், நண்பர்களாலும் 18 வயதான யுவதியொருவர் கூட்டு பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய காமுகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரவெட்டி மேற்கு பகுதியை சேர்ந்த 18 வயதான யுவதியொருவர், ஜனவரி 11ஆம் திகதி இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.

அன்று காலை 10 மணிக்கு காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், மதியம் 2 மணிக்கு வீதியோரம் இறக்கி விடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தொலைபேசி காதலனும், நண்பர்களும் தனது தங்கச்சங்கிலியை அபகரித்து சென்று விட்டார் என்பதே அவரது முறைப்பாடு.

18 வயதான அந்த யுவதிக்கு தொலைபேசியில் தவறிய அழைப்பொன்று வந்துள்ளது. அந்த அழைப்பு பின்னர் காதலாக மாறியது. இருவரும் முகம் தெரியாமலே தொலைபேசியில் காதலித்து வந்தனர்.

தன்னை திருமணம் செய்ய விரும்புவதாக காதலன் கூறியதையடுத்து, சம்பவ தினத்திற்கு முதல்நாளில் இருவரும் சந்தித்து கொண்டனர். ஜஸ்கிரீம் கடையொன்றிற்கு தன்னை அழைத்துச் சென்று, ஐஸ்கிரீம் வாங்கித் தந்ததாக தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்று, தனது தாயாருடன் பேசுவதற்கு அழைத்துச் செல்வதாக காதலன் கூறியுள்ளார்.

யுவதி தனது தங்கச்சங்கிலியை அபகரித்து சென்றதாக மட்டுமே முறைப்பாடு செய்தார். பொலிசாரின் நீண்ட விசாரணையின் பின்னரே, அவர் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து யுவதியை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

முதல் தடவை யுவதி, தவறான இடத்திற்கு அழைத்து சென்றார். பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கம் பகுதியிலுள்ள பற்றைப் பகுதியொன்றை அடையாளம் காட்டினார். யுவதி காண்பித்த இடத்தில் எந்த தடயமும் காணப்படவில்லை. யுவதி இடம் தெரியாமல் அந்த இடத்தை காண்பித்திருக்கலாமென கருதப்பட்டது.

அவர் காண்பித்த பகுதி பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்டது. அதனால் வழக்கு விசாரணை பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பற்றைக்குள் அழைத்துச் சென்று, தன்னை பாலியல் பலாத்காரம் செய்த காதலன், நீர் அருந்தி விட்டு வருவதாக கூறி அங்கிருந்து சென்றதாக யுவதி குறிப்பிட்டார்.

பின்னர், காதலனின் நண்பர்களென தெரிவித்து அங்கு வந்த 3 பேர், தனது கால்களையும் கைகளையும் அழுத்திப் பிடித்து, வாயை பொத்தி, பலாத்காரத்திற்குள்ளாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் காதலன் அங்கு வந்ததாகவும், தனது கைத்தொலைபேசி, நகைகள், 40,000 ரூபா பணத்தை பறித்து விட்டு, வீதியோரத்தில் இறக்கி விட்டு சென்று விட்டார்கள் என முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் துன்னாலை பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவன் தப்பியோடி விட்டார்.

யுவதியை தொலைபேசியில் காதலித்து மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றவர் திருமணமானவர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளி பகுதியிலேயே குற்றம் நடந்தது தெரிய வந்தது.

துன்னாலை கிழக்கு, ஆட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த சந்தேகநபர் இலங்கையிலிருந்து வெளியேறினார். அவர் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்டு, வெளிநாமொன்றில் கைதாகி, இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

கொழும்பில் பதுங்கியிருந்த அவர், தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad