யாழ் மாவட்டத்தில் இவ்வாறான 7 யுவதிகள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் சிலர் போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுவடும் சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த யுவதிகள் அனைவரும் 21- 24 வயதிற்குட்பட்டவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் தவறான காதல் உறவினால் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என தெரிய வந்தது. போதைக்கு அடிமையான பின்னர், போதைப்பொருளை தொடர்ந்து பெற, பலருடன் பாலியல் துர்நடத்தையில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
ஹெரோயின், ஐஸ் போதைப்பொருளுக்கே இவர்கள் அடிமையாகியுள்ளனர்.