கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கோப்பாய் மத்தி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்றிரவு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவரை அடித்து கொலை செய்தது யார் என இதுவரை தெரியவில்லை. இச்சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான ர.அஜித் (வயது 30) என்பவரே இவ்வாறு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.