பேருந்து பயணத்தில் கடற்படையில் பணியாற்றும் தாதியின் உடலில் சாய்ந்த நிலையில்
அவரை துன்புறுத்தியதாக கூறப்படும் வைத்தியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியர் தனது ஸ்மார்ட் போன் மூலம் தாதியை வீடியோ பதிவு செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. அவரது கைத்தொலைபேசியை ஆய்வு செய்த போது, இந்த வியம் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட 34 வயதுடைய சந்தேக நபர் மேல் மாகாணத்தில் உள்ள அடிப்படை வைத்தியசாலையில் பணிபுரிபவர்.
கடற்படையில் பணிபுரியும் தாதி இது குறித்து பயணிகளுக்கு தெரிவித்ததையடுத்து பயணிகள் குழுவொன்று வைத்தியரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட வைத்தியர் மதுபோதையில் இருந்தமை தெரியவந்ததையடுத்து, கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர் மதுபோதையில் இருந்தமை மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்படை தாதியும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் செய்தார்.