யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை நாயன்மார்கட்டு குளத்தில் இருந்து பெண் ஒருவரது சடலம் இன்று வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் குளத்தில் இருந்து மிதந்து கரையை அடைந்துள்ள நிலையில் ஊர் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும் சடலமாக காணப்படுவது யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
பொலிஸார் சடலத்தை அடையாளம் காண்பது தொடர்பாகவும், மரணத்திற்கான காரணம் தொடர்பாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.