ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் பெண்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக கல்கிஸை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று (03) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் அவர்கள் கைதாகியுள்ளனர்.
கல்கிஸை, இரத்மலானை பிரதேசத்தில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது விபசார விடுதியின் முகாமையாளர் உட்பட 7 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 23 முதல் 39 வயதுடையவர்கள் என்பதுடன் தொரஹென, பாணந்துறை, திகன, வாதுவை, மத்துகம, கெக்கிராவை மற்றும் நுகேகொடை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைதான சந்தேகநபர்கள் கல்கிஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.