களுத்துறை பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்குள் இரவு வேளைகளில் நிர்வாணமாகபுகுந்து திருடும் நபரை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர் களுத்துறை பிரதேசத்தில் பல வீடுகளில் திருடி வருகிறார்.
களுத்துறை தெற்கு மற்றும் வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நபர் வீடுகளுக்குள் நிர்வாணமாக நுழைந்து சுற்றித் திரிவது சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.