சிவா கராட்டியில் கறுப்பு பட்டி பெற்றவர். அத்துடன் தனது பகுதியில் ரவுடித்தனங்களில் ஈடுபட்டவர் எனவும் தெரியவருகின்றது. இவர் தனது பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். அத்துடன் அந்தப் பெண்ணை கட்டாயப்படுத்தி கடத்திச் சென்று பாலியல் உறவு கொண்டதால் அந்தப் பெண் ஏதும் செய்ய முடியாத நிலையில் சிவாவுடன் குடும்பம் நடாத்தி வந்துள்ளார். சிவா மூலம் குறித்த பெண்ணுக்கு இரு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் பிறந்துள்ளார்கள். இந் நிலையில் வேறு நபர்களுடன் மனைவி கள்ளக்காதலில் ஈடுபடுவதாக சந்தேகித்து சிவா மனைவியை தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததாகத் தெரியவருகின்றது. ஒரு கட்டத்தில் மனைவியை கொடூரமாகக் தாக்கி பெண்ணுறுப்பை கத்தியால் குத்தியெடுத்ததாகவும் மனைவி இரத்தப் பெருக்குடன் வீட்டுக்குள் மயங்கிக் கிடக்கவே அவள் இறந்து விட்டாள் என நினைத்து சிவா வீட்டை விட்டு வெளியேறிய பின் அயலவர்கள் மனைவியை வைத்தியசாலையில் அனுமதித்து உயிர்தப்பியதாகத் தெரியவருகின்றது.
மீண்டும் வீட்டுக்கு வந்தால் கணவன் கொலை செய்வான் என அறிந்த மனைவி தனது கடைசி மகளுடன் இந்தியாவுக்கு ஒடித்தப்பினார். அதன் பின்னர் இரு ஆண் பிள்ளைகளையும் மனைவியின் தாயாரே வளர்த்து வந்துள்ளார். இந் நிலையில் இரு ஆண் பிள்ளைகளும் மீசாலையில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்று வந்துள்ளார்கள்.
மனைவி இந்தியா போனதால் ஆத்திரமடைந்த கராட்டி சிவா இரு ஆண் பிள்ளைகளையும் தொடர்ச்சியாகத் தாக்கி கொடூரமாக சித்திரவதை புரிந்து வந்ததாகத் தெரியவருகின்றது. அண்மையில் கூட பாடசாலைக்குள் புகுந்து ஒரு மகனை சிவா தாக்கியுள்ளார். அத்துடன் பல மாணவர்கள் பார்க்கத்தக்கதாக தனியார் ரியூசன் முடித்து வந்த மற்றைய மகனை தெருத் தெருவாக அடித்து இழுத்துச் சென்றுள்ளான் கராட்டி சிவா.
இதனையடுத்து இரு பிள்ளைகளும் இவனது சித்திரவதை தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்கள். இருப்பினும் பொலிசார் அதை கவனத்தில் எடுக்கவில்லை எனத் தெரியவருகின்றது. இதே போல் 4 முறை இரு ஆண் பிள்ளைகளும் பொலிஸ் நிலையம் சென்று முறையிட்டும் பொலிசார் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவருகின்றது. தந்தை தாக்குவது சிலவேளை குளப்படி காரணமாக இருக்கலாம் என பொலிசார் கருதியதாக பொலிஸ் தரப்புகளிலிருந்து தகவல் வந்துள்ளது.
இந் நிலையிலேயே இரு மகன்களும் மிகவும் திட்டமிட்டு தமது இன்னொரு நண்பனுடன் நள்ளிரவு வேளை கத்தியுடன் சிவா தங்கியிருந்த தோட்டத்து கொட்டிலுக்கு சென்றுள்ளார்கள். இரவு 8.30 மணியிலிருந்து பற்றைக்குள் மறைந்திருந்து தமது தந்தையின் நடவடிக்கைகளை அவதானித்துக் கொண்டிருந்தனர். சிவா இரவு 11 மணிக்கு நித்திரைக்கு சென்ற பின் நள்ளிரவு ஒரு மணியளவில் இரு சகோதரர்களும் கொட்டிலுக்குள் புகுந்து சிவாவை கண்டபடி வெட்டிக் கொன்றார்கள்.
இதில் மூத்த மகன் படிப்பில் மிகவும் கெட்டிக்காரன். ஓ.எல் பரீட்சையில் 8 ஏ சித்திபெற்றவன். தற்போது ஏ.எல் பரீட்சை எடுத்துள்ளான். அதே போலவே இரண்டாவது மகனும் படிப்பில் தேர்ச்சி பெற்றவன். அத்துடன இவர்கள் இருவரும் எந்தவித போதைப் பொருளுக்கு அடிமையானவர்களோ அல்லது மதுவுக்கு அடிமையானவர்களோ இல்லை என அவர்களது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரையும் கொலைகாரர்களாக மாற்றியது யார்?