சந்தேக நபரான பௌத்த பிக்கு, சிறுமியின் தாயாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார் எனவும் பிக்குவுக்கு சொந்தமான மாடி வீட்டில் பெண்ணுடன் மதுபானம் அருந்தி விட்டு, சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இது குறித்து பொலிஸாரிடம் தகவல் வெளியிட்டுள்ள சிறுமி, தாயாருடன் பிக்குவின் வீட்டுக்கு சென்றதாகவும் அப்போது அவர்கள் மது அருந்திய பின்னர் தாய் மயங்கி விட்டதாகவும் இதனையடுத்து பிக்கு தன்னிடம் வந்து தவறாக நடந்துக்கொண்டதாகவும் சிறுமி கூறியுள்ளார்.
மூன்று தினங்கள் தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும் யாரிடமும் கூற வேண்டும் என்று அச்சுத்தியதாகவும் அச்சம் காரணமாக தான் அதனை வெளியில் கூறவில்லை எனவும் சிறுமி குறிப்பிட்டுள்ளார்
இந்த சம்பவம் நடந்து சில தினங்களுக்கு பின்னர் தனது தாயிடம் கூறியதாகவும் தாய், பிக்குவை திட்டியுடன் தன்னுடன் எதையும் வைத்துக்கொள்ளுமாறும் இப்படியான வேலையை செய்ய வேண்டாம் எனக்கூறியதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.