வலிகாமத்தை சேர்ந்த ஆணொருவர் தென்மராட்சியில் பெண்ணெடுத்து மணம் முடித்துள்ளார்.
மணம் முடித்து சிறிது காலத்தில் ஏஜென்சிக் காரனை பிடித்து ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு தாவியுள்ளார் மாப்பிள்ளை. இதன் பின்னர் அவர்களது இல்லறம் whatsapp ஊடாக நல்லறமாக தொடர்ந்து வந்துள்ளது.
மனைவியின் பிறந்த நாள் நெருங்கவும், மனிசிக்கு சப்பிறைஸ் கொடுக்க விரும்பியுள்ளார் அந்த அப்பாவி மாப்பிள்ளை. இதற்கான தேடலில் facebook இல் வடமராட்சியை சேர்ந்த Surprise Gift Delivery செய்யும் ஒருவன் அறிமுகமாகியுள்ளான்.
பெடியன் வெள்ளையாக இருப்பதால் நல்லவனாக இருப்பான்… சீப்பாக வேலையை முடிக்கலாம் என எண்ணியுள்ளார் மாப்பிள்ளை. பின்னர் ஒரு தொகை பணத்தை அனுப்பியும் வைத்துள்ளார்.
மனிசியின் பிறந்த நாள் அன்று அந்த வடமராட்சி சப்றைஸ் காரன் மாதக்கணக்கில் தோய்க்காத மிக்கிமவுஸ் சட்டையை போட்டுக்கொண்டு போய் ஆட்டம் ஆடி இத்துப்போன புறமிஸ் கண்டோசும் கேக்கும் கொடுத்துள்ளான்.
அதன் பின்னர் மொக்கை கேள்விகள் கேட்கவே நைட்டியுடன் இருந்த பெண்ணும் பதில்கள் அளித்துள்ளார். அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளான் அந்த சப்பிறைஸ் காரன்.
அதன் பின்னர் குறித்த வீடியோவை தனது பேஸ்புக்கில் பகிரப்போவதாகவும் அதன் மூலம் லட்சக்கணக்கான ஆக்கள் அதை பார்ப்பார்கள் என்றும் கூறியுள்ளான் (அவனது பேஜ் இல் வெறும் 160 likes தான் இருக்கின்றது என்பது வேறு கதை). அத்துடன் குறித்த பெண்ணை Tag செய்து போடவேண்டும் என கூறி அப் பெண்ணிடம் பேஸ்புக் ஐடியை வாங்கி friend ஆகியுள்ளான்.
வெறும் ரெண்டு மாசம் தான்
எப்படியோ தூண்டிலை போட்டு பெட்டையை மாப்பிள்ளை போட்ட சீட்டுக் காசையும் சேர்த்து கூட்டிக்கொண்டு ஓடிவிட்டான்.
சப்றைஸ் கொடுக்க விரும்பிய மாப்பிள்ளைக்கு பெரிய சப்றைஸ் ஆக திரும்ப கிடைத்துள்ளது.
வலிகாமம், தென்மராட்சி மற்றும் வடமராட்சி ஆகிய மூன்றும் சேர்ந்து மக்களுக்கு சப்றைஸ் கொடுத்துள்ளனர்.