கனடாவில் 70 மில்லியன் டொலர் பரிசுத் தொகையுடைய லொத்தர் சீட்டு இன்றுடன் காலாவதியாகின்றது.
இதுவரையில் குறித்த லொத்தர் சீட்டை வென்றெடுத்தவர் பணப்பரிசுக்கு உரிமை கோரவில்லை.
கடந்த ஆண்டு இந்த லொத்தர் சீட்டுக்கு 70 மில்லியன் டாலர் பணப்பரிசு கிடைக்கப்பெற்று இருந்தது.
எனினும் கடந்த ஓராண்டு காலமாக இந்த பண பரிசு உரிமை கோரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கனடியன் ரத்தர் சீட்டு வரலாற்றில் இவ்வளவு பாரிய தொகை வெற்றி ப் பணம் உரிமை கோரப்படாத சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது.
இன்றைய தினம் இரவு 10:30 மணி வரையிலேயே இந்த லொத்தர் சீட்டு குறித்து உரிமை கோரப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசு தொகையை உரிமை கோருவதற்கு சுமார் 1800 பேர் முயற்சித்துள்ளனர்.
அவற்றில் 800 பேர் தங்களது லொத்தர் சீட்டு தொலைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இந்த 1800 பேரில் ஒருவர் கூட சரியான முறையில் லொத்தர் சீட்டு உரிமையாளர் தாம் என்பதனை உறுதி செய்யத் தவறியுள்ளனர்.
இந்த லொத்தர் சீட்டு தொலைந்து இருக்கலாம் அல்லது இந்த லொத்தர் சீட்டு வெற்றி இலக்கங்கள் பரீட்சித்து பார்க்கப்படாமலே இருந்திருக்கலாம் என லொத்தர் சீட்டு நிறுவனம் ஊகம் வெளியிட்டுள்ளது.
எனவே இந்த லொத்தர் சீட்டை ஒருவர் உரிமை கோருவதற்கான சாத்தியங்கள் குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.