24 வயதில் விபச்சாரம் மூலம் ரூ.10 கோடி சம்பாதித்த இலங்கை யுவதி.

கொள்ளுப்பிட்டியில் இரண்டு மாடிக் கட்டிடத்தில் இயங்கி வந்த, உள்நாட்டு, வெளிநாட்டு பெரும் பணக்காரர்கள் வந்து செல்லும் விபச்சார விடுதியை சுற்றிவளைத்து இரண்டு தாய்லாந்து யுவதிகள் உட்பட ஐவரை கைது செய்ததாக பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

24 வயதான அழகிய இலங்கை பெண்ணும், முகாமையாளரான முன்னாள் இராணுவ அதிகாரியும் கைதான ஏனைய 3 இலங்கையர்களில் உள்ளடங்குவர்.

கைதான இலங்கையர்களஏனைய சந்தேக நபர்களில் இலங்கையைச் சேர்ந்த அழகிய யுவதியும் முகாமையாளரும் முன்னாள் இராணுவ அதிகாரியும் இந்த விபச்சார மோசடியை நடத்துவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

24 வயதான இலங்கைப் பெண் தனது ஏழு வயது மகளை குறித்த இடத்திற்கு அழைத்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு 3, கொள்ளுப்பிட்டியில் இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றில் விபச்சார நிலையம் வெற்றிகரமாக நடத்தப்படுவதாக பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உதய குமாரவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கோட்டை நீதவான் நீதிமன்றில் தேடுதல் உத்தரவு பெறப்பட்டு, இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், வாடிக்கையாளரை போல நடித்து யுவதியொருவரை 10,000 ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்து, அறைக்குள் சென்றபோது, மறைந்திருந்த பொலிசாருக்கு சமிக்ஞை வழங்கியதையடுத்து, பொலிசாரால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் தங்கியிருந்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட தாய்லாந்து இளம் பெண்கள் இருவரிடமும் கடவுச்சீட்டு கூட இல்லை என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கைது செய்யப்பட்ட 24 வயதுடைய இலங்கைப் பெண் சுமார் பத்து கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை வைத்திருப்பவர் எனவும், அவருக்கு சொந்தமான மூன்று சொகுசு கார்கள் மற்றும் பிலியந்தலையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மூன்று மாடி வீடு எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில், அவர் விபச்சாரத்தின் மூலம் இந்த சொத்துக்களை சம்பாதித்ததாக அவர் வெளிப்படுத்தியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட மோசடியின் பிரதான சந்தேக நபரான இராணுவ அதிகாரி சுகயீனத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததால் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட தாய்லாந்து யுவதிகளிடம் வாக்குமூலம் பெறுவதற்கு தாய்லாந்து தூதரகத்தின் ஊடாக மொழிபெயர்ப்பாளரின் உதவியைப் பெறவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad