காட்டாரில் குறித்த இரு இளைஞர்களும் தங்கியிருந்த இடத்திலேயே சடலமாக மீட்கப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு நாட்களாக வேலைக்கு வராத காரணத்தால் குறித்த இரு இளைஞர்களும் தங்கியிருந்த அறைக்குள் சென்று பார்த்தபோது இருவரும் சடலமாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் விசுவமடு – இளங்கோபுரம் பகுதியை சேர்ந்த 21 வயது சிவகுமார் தர்சன் என்ற இளைஞன் சடலமாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும்ப வறுமை காரணமாக சிவகுமார் தர்சன் வேலைக்காக கட்டாருக்கு சென்ற நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவரின் பெற்றோர்கள் மிகுந்த வறுமையில் தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துவருகின்றனர்.
குறித்த இளைஞனின் சடலத்தை தாயகம் கொண்டுவர உதவி செய்யுமாறு பெற்றோர்கள் கேட்டுக்கொள்கிறார். (0771695516)