கனடா, ஒன்ராறியோ – Vaughan நகரில் வசிக்கும் இலங்கைத் தமிழன் திவாகர் பரம்சோதி என்னும் 43 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் 19 ஆம் திகதியில் இருந்து இவரை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கடைசியாக கடந்த 19ம் திகதி மாலை 6 மணியளவில் தனது குடும்பத்தினருடன் பேசியதாகவும், அதன் பின்அவர் வீடு திரும்பவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பொலிஸார் குறித்த நபரை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
அதன்படி, குறித்த நபர் 5’5′ அடி உயரம் கொண்டவரும், கடைசியாக சிவப்பு மற்றும் கருப்பு நிற உடை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.