இரண்டு வருடங்களாக தனது மகளை பாலி.யல் வன்.கொடுமை செய்ததாக கூறப்படும் தந்தை ஒருவருக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றில் 17 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு கிளிநொச்சிக்கு அருகில் உள்ள வீட்டில் வைத்து தனது பத்து வயது மகளை அடித்து துன்புறுத்தி பாலி.யல் வன்.கொடுமை செய்த தந்தைக்கே, கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.ஏ.சஹாப்தீன் இந்த சிறைத்தண்டனையை விதித்தார்.
இரண்டு வருடங்களாக தனது மகளை பாலி.யல் வன்.கொடுமை செய்த கணவருக்கு எதிராக, சிறுமியின் தாயார் கிளிநொச்சி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, முன்வைக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களிலும் சிறுமியின் தந்தை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன், பிரதிவாதிக்கு அரசாங்கக் கட்டணமாக பத்தாயிரம் ரூபாவைச் செலுத்துமாறும், சிறுமிக்கு இழப்பீடாக இரண்டு இலட்சம் ரூபாவை வழங்குமாறும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.