16 வயது மாணவன் 15 வயது மாணவியுடன் ஓட்டம்.

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுருவாகலை பிரதேசத்தை சேர்ந்த  15 வயதுடைய மாணவி தனது 16 வயது காதலனுடன் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருவரும்  ஒரே பாடசாலையில்  10 மற்றும் 11ம் வகுப்கில் கல்வி கற்று வந்துள்ளனர்.

இவர்களின் காதல் உறவு குறித்து சிறுமியின் தாயார் எச்சரித்ததையடுத்து,இ கவலையடைந்த சிறுமி, செல்லபாவ பகுதியைச் சேர்ந்த 16 வயது தனது காதலனுடன்  சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் குறிப்பிட்ட மாணவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.




Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad