போதைக்கு அடிமையான மானிப்பாய் இளைஞனை கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
மானிப்பாய் பகுதியில் கடந்த புதன்கிழமை போதைப்பொருளுடன் கைதான 22 வயதான மானிப்பாய் பகுதி இளைஞனை பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முற்படுத்தினர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என கண்டறியப்பட்டதை அடுத்து , இளைஞனை பொலநறுவை கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புமாறு மன்று உத்தரவிட்டது.