சடலமாக மீட்கப்பட்ட 24 வயது தாயும் 11 மாத குழந்தையும்.

 அங்குருவாதொட்ட, ஊருதுடாவ பிரதேசத்தில் இளம் தாய் மற்றும் அவரது மகள் காணாமல் போயிருந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

24 வயதான வாசனா குமாரி மற்றும் அவரது 11 மாத மகள் டஷ்மி திலன்யா இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளனர்.

இந்த நிலையில் இன்று அங்குருவாதொட்ட இரத்மல்கொட காட்டில் இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவர் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் மனைவி மற்றும் குழந்தை இல்லாததால் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad