ஜப்பான் நாட்டு அரசாங்கம் ஒரு பிரத்யேக இணையதளத்தை தொடங்கி அதன் மூலம் வாடகை காதலியை தருவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜப்பான் நாட்டில் காதலன் அல்லது காதல் இல்லாதவர்கள் இந்த இணையதளத்தின் மூலம் தொடர்பு கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 3000 ரூபாய் செலுத்தி வாடகை காதலி அல்லது காதலனை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த இணையத்தில் வயது சம்பளம் போன்ற விவரங்களை பதிவு செய்தால் அவர்களுக்கு தகுந்தவாறு வாடகைக்கு காதலன் அல்லது காதலி கிடைப்பார்களாம்.
இந்நிலையில் ஜப்பான் அரசாங்கத்தின் இந்த முடிவு இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்து விடும் என ஜப்பான் நாட்டின் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
எனினும் ஜப்பான் அரசு இதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது ஏராளமான இளம் வயதினர் காதலன் காதலி இல்லாமல் தவித்து வருவதாகவும் இதனால் அவர்கள் மனசோர்வுக்கு உள்ளாகி விடுவதாகவும் அதனை போக்கவே இந்த புதிய முயற்சி ஏற்படுத்தி இருப்பதாகவும் ஜப்பான் அரசு விளக்கம் அளித்துள்ளது.