கொழும்பில் அலுவலகங்களில் பணிப்புரியும் பெண் ஊழியர்கள் உட்பட பெண்களை பயன்படுத்தி,பம்பலப்பிட்டி நகரில் இயங்கி வந்த பாலியல் தொழில் விடுதி சுற்றிவளைத்த வலானை மோசடி தடுப்பு பிரிவு பொலிஸார் விடுதியின் உரிமையாளரான பெண் உட்பட சில பெண்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்களில் இரண்டு பேர் கொழும்பில் உள்ள அலுவலகங்களில் பணிப்புரிந்து வருபவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பலர் கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் உள்ள அலுவலகங்களில் பணிப்புரியும் பெண்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
இவர்கள் அலுவலக பணி முடிந்து, இந்த இடத்திற்கு வந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு மேலதிக வருமானத்தை பெறுவதை பழக்கமாக்கிக்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில பெண்கள் இரவு நேரத்தில் குறித்த இடத்தில் தங்கி இருந்து விட்டு, காலையில் அலுவலகத்திற்கு வேலை செல்வதாகவும் பகல் நேரத்தில் அங்கு எவரும் இருப்பதில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வாடிக்கையாளர் ஒரு பெண்ணுக்கு 9 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும் எனவும் இரவு முழுவதும் இருக்க வேண்டுமாயின் 30 ஆயிரம் ரூபாவை செலுத்த வேண்டும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.