மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் பலி.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் தந்தையும் மகனும் பரிதாபகரமாகச் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் அனுராதபுரம் – மதவாச்சி பிரதேசத்தில் நேற்று (19.07.2023) இரவு 08 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் திருகோணமலையை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற ஏ.சில்வெஸ்டர் என்ற 22 வயதுடைய மகன் சம்பவ இடத்திலும், வி.அன்ரனிதாஸ் என்ற 48 வயதுடைய தந்தை வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad