"பள்சர்களில் பறக்கும் பன்னாடைகள்" ஸ்கூட்டிபப்புகளில் திரியும் குமரிகள்"

 "அண்ணன் கனடால தலையால மண் கிண்டுகிறான். அவன் தங்கை இங்கே நோண்டுகிறாள் நொக்கியாவை" அடிமேல் அடிவிழுந்தும் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கின்ற குடாநாட்டு மக்களின் வாழ்வாதாரம் 90 வீதம் வெளிநாடு வாழ் உறவுகளின் கைகளில் தான் இருக்கின்றது.

எத்தனையோ துன்பத்தின் மத்தியில் இன்னொரு இனத்தினால் பொருளாதார ரீதியில் அடிவாங்கி அடிவாங்கி களைத்துவிட்ட குடாநாட்டு மக்களை இவர்கள் மிகவும் நல்லவங்களாடா எவ்வளவு அடிவாங்கினாலும் பேசாமல் இருக்கிறாங்கள் என எண்ணி வடிவேலு பாணியில் அடிக்காமல் விட்டு அட்டை போல் ஒட்டி இரத்தம் உறுஞ்ச நினைக்கும் பெரும்பான்மை சமூகத்தவர்களுக்கு இரையாக செல்ல துடிக்கும் தமிழ் மக்களை காப்பாற்ற எவரும் இனி வரப்போவதில்லை. எமது இனத்தின் வீரப் போராட்டத்திற்கு உரம் போட்ட வெளிநாட்டு வாழ் தமிழச் சமூகம் தற்போது எமது இனத்தினை கலப்படப் பொருளாக்குவதற்கும் துணைபோக நிற்கிறதோ என எண்ணத்தோன்றுகிறது.

"பள்சர்களில் பறக்கும் பன்னாடைகள்" ஸ்கூட்டிபப்புகளில் திரியும் குமரிகள்" "கொழுத்தாடு பிடிக்கும் கோவில் நிர்வாகங்கள்" "பண்பை இழக்கும் பாடசாலைகள்" " குடாநாட்டில் எங்கு பார்த்தாலும் சிரழிகின்றது எமது தனித்துவமான கலை கலாச்சாரங்கள். "இயக்க நிலையில் சீராக இயங்கிய எமது பண்பாடு, கலாச்சாரங்கள் தற்போது இயக்கமற்ற நிலையல் சீரழிகின்றது". சரியான பாதை காட்டுவதற்கு முறையான ஆட்கள் இல்லாத நிலையில் மேய்பன் இல்லாத மந்தைகள் போல மாறிவிட்டது எமது நிலை. இவற்றுக்கு எல்லாம் முக்கியமான காரணம் வெளிநாடு வாழ் உறவுகள். ஏன் எதற்கு என கேட்காது தனது இரத்தத்தை வியர்வையாக்கி உழைக்கும் பணத்தினை தனது உறவும் உற்றாரும் ஊரும் நல்லா இருக்க அனுப்பும் பணம் இங்கே அவர்களை எவ்வாறு நாறடிக்கிறது என அவர்களுக்கு தெரியுமா?.

எடுத்திட்டாள் "ஸ்கூட்டிப்பப்" அடுத்தவீட்டு வம்மி, நீ உங்க இருந்து என்ன செய்யிறாய் தம்பி ,உன்ர தங்கச்சி அழுகிறாள் விம்மி, அதைச் சொல்லுறாள் ரெலிபோனில ஒரு கேடு கெட்ட மம்மி. தம்பி அங்க என்ன செய்யுறான் எவ்வளவு கஸ்டப்படுகிறான் என்று நினைக்காமல் தொடையிடுக்கினுள் வைச்சு ஓடுறதுக்கு அவளுக்கு வேணுமாம் ஒரு "ஸ்கூட்டி பப்" . ஏ.ஏல் ல பயோ படிச்சு மூன்று தடவையும் எடுத்து பெயலானவள் ஒரே தடவையில் "பாஸ் பண்ணி ஸ்கூட்டிபப்" ல "மெடிக்கல் பக்கல்டிக்கு" போற யுவதியைப் பார்த்து இப்படி கேக்குது. அண்ணனும் தன் பாசத்தை காட்ட அனுப்புகிறான் பணம். ஏறுகிறது அவளுக்கு தலைகனம்,மாறுகிறது அவளது குணம். அதற்கு பின் அவளுக்கு திருமணம் பார்பதென்றால் பள்சறில் பகட்டாய் திரிபவன்தான் வேணும் என்பாள். தனது தகுதிக்க மேல மாப்பிளை பார்க்க சொல்வாள். எல்லாவற்றக்கும் இருக்கிறார் ஒரு அண்ணா வெளிநாட்டில வெங்காயம் போல. என்ன கேட்டாலும் தலையாட்டி அனுப்புவதற்கு.

சிறுகச் சிறுக தேனி போல சேர்த்து சேமிப்பின் மறு வடிவமாய் இருந்த யாழ்குடாநாட்டு மக்கள் தற்போது கட்டுடைந்த குளத்து நீராய் தமது சேமிப்பை கரைப்பதைப் பார்த்து மனம் கொதிக்கிறது. "யாரொரு நோவேன் யார்க்கெடுத்துரைப்பேன்" .குளித்துக் கொண்டு இருக்கும் போதும் குமரிட கையில கான்போன் கிடக்குது என்று ஒரு பெரியவர் மனம் நோவது யாருக்கு புரியும். பக்கத்து வீட்டு பரிமளா அக்காவை பருப்பு அவியிதில்லை என்ன செய்யலாம் என்று கான்போனிலேயே கருத்து பரிமாறுகிற அவலம் நடக்கிது குடாநாட்டில். "குமரன் சேர்ட வகுப்புக்கு வந்த அந்த பெடியன் இங்கேயும் வாறானடி" என்று வகுப்பு நடக்கும் போதே போனில பேசுற மாணவிகள். உன்ரை ஆள் அங்க போறாளடா என்று போனிலேயே போட்டு வைக்கும் மாணவ மணிகள், கண்ட கண்ட படங்களை எல்லாம் கான்போனில வைச்சு காட்டும் அவலம் தற்போது எல்லா பாடசாலை மட்டத்திலும் பரவியிருக்கிறது. ஓடுற பைக்ல கெல்மட்டுக்குள் சொருகிக்கொண்டு பெரிதாக தனியே சிரித்தபடி கதைத்துக் கொண்டுபோய் கால்வாய்க்குள் குப்பற விழுற சம்பவங்களும் ஏராளம். அவன் ஒரு புது மொடல் ஐபோன் வைச்சுருக்கிறான் எனக்கும் அப்படி அனுப்பு மாமா என்று வெளிநாட்டில் இருப்பவரிடம் கேட்டு வாங்கிய போனை பொம்பிளை பிள்ளைகள் வந்தால் நீட்டிக் காட்டியபடி கதைப்பது இன்னொரு புறம். பரதேசிபோல திரிஞ்சவன் எல்லாம் பல்சார் வைத்திருக்கிறாங்கள் எனக்கும் வேண்டித்தா என்று ஒற்றைக்காலில் நிற்கும் குறைமாத குஞ்சு. இப்படி இன்னும் சொல்ல முடியாத ஏராளமான சீர்கேடு விடயங்கள் குடாநாட்டில் நடந்தவண்ணம் இருக்கின்றன.

இவற்றுக்கு எல்லாம் அடிப்படை யார்?? கேட்பதை எல்லாம் கொடுத்து கெடுக்கும் புண்ணியவான்கள் யார்?? இவர்களிடம் புரளும் பணத்துக்கு காரணம் யார்?? கேள்விகள் எல்லாவற்றுக்கும் சுட்டிக்காட்டும் ஒரே பதில் வெளிநாட்டு தமிழ் உறவுகள்தான். தான் இன்பமாக வாழா விட்டாலும் தன் இனம், உறவுகள் எல்லாம் சந்தோசமாக வாழவேண்டும் என்ற நோக்கத்தில் இவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள உறவுகளுக்கு செய்யும் இவ்வாறன உதவிகள் குடாநாட்டு மக்களை சோம்பேறிகளாகவும் சோத்து மாடுகளாகவும் ஆக்கியிருப்பதை அறிவீர்களா? உங்களிடம் உதவி கேட்கும் உங்கள் குடாநாட்டு உறவுகள் உங்களை வெங்காயமாக்கி இங்கு தாங்களும் வெங்காயமாக மாறுவதை நீங்கள் அறியாது இருப்பது மேலும் இந் நிலையை மோசமடையச் செய்யும். உதாரணமாக முதலில் உங்கள் உறவுகளில்ஒருவர் வாகனத்தை வாங்குவதற்காக உங்களிடம் உதவி கோரும் போது அவர்களுக்கு வாகனம் செலுத்தும் ஆற்றல் இருக்கிறதா, லைசன்ஸ் இருக்கிறதா, குடிப்பவரா என்பவற்றை எல்லாம் யோசியுங்கள். இல்லாவிடின் உங்களது உதவியே அவனையும் தெருவில் செல்வோரையும் பலிக்கடாவாக்கிவிடும். பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்ற பழமொழி யாருக்கு பொருந்துதோ இல்லையோ அது உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தற்போது சீதனம் கூடுதலாக அதிகரித்து வெளிநாட்டு உதவி இல்லாத கன்னிகளின் கண்ணீருக்கு இலக்காகி இருப்பதும் நீங்கள்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இந்த பதிவானது 2010ம் ஆண்டளவில் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்ட பதிவாகும். ஆனாலும் தற்போதும் எம் குடாநாட்டுக்கு பொருந்தும் என்பதனால் மீண்டும் எமது jaffnabbc இல் பதிவிடுகின்றோம். முடிந்தால் நீங்களும் பகிருங்கள்.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad