யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்று புதன்கிழமை (13) உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் சுன்னாகம் - , உடுவில் - கற்பகப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த சண்முகநாதன் துசீந்தினி (வயது 26) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணிற்கு திருமணம் ஆகி ஒரு வருடமேயான திருமணமான நிலையில் , கணவர் புலம்பெயர் நாட்டில் வசித்து வருவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அவர் நேற்று செவ்வாய்க்கிழமை (12) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதோடு மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .