நாவற்குழி செம்மணி வீதியுடாக முச்சக்கர வண்டியில் பயணித்த போது நாய் குறுக்கே பாய்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி கணவர் உயிரிழந்துள்ளார்.
மனைவி மற்றும் இரண்டு வயது ஆண் குழந்தை காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை 4:00 மணியளவில் நாவற்குழி செம்மணி வீதியில் இடம்பெற்றுள்ளது . படுகாயமடைந்த குறித்த இளம் குடும்பத்தர் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் உயிரிழந்தார்.