யாழ்ப்பாண நகரப்பகுதியில் உள்ள இரண்டு கடைகள் அண்மையில் எரிக்கப்பட்டன. இதன்போது ரூ.2 கோடி பெறுமதியான சொத்துக்கள் எரித்து அழிக்கப்பட்டன. அத்துடன் கார் ஒன்றும் எரித்து அழிக்கப்பட்டன. அத்துடன், மோட்டார் சைக்கிள் ஒன்றும் பறித்தெடுக்கப்பட்டிருந்தது.
விசாரணை மேற்கொண்ட பொலிசார் 3 பிரதான சந்தேகநபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு வாள் என்பன மீட்கப்பட்டன.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட் விசாரணையில், சந்தேகநபர் ஒருவரின் பெரியம்மா பெல்ஜியத்தில் வாழ்ந்து வருவதும், அவருக்கு தெரிந்தவர் ஒருவரின் தேவைக்கு அமைய, கூலிப்படையாக யாழ்ப்பாண ரௌடிகள் செயற்பட்டது தெரிய வந்தது.
கடைகளை எரிப்பதற்கு ரூ.12 இலட்சமும், வாகனங்களை எரிப்பதற்கு ரூ.7 இலட்சமும் வழங்கலாம் என பெல்ஜியம் நபர் ஒப்பந்தம் பேசியுள்ளார். முதற்கட்டமாக ரூ.1.5 இலட்சம் பணம் வழங்கப்பட்டுள்ளது. சந்தேகநபரின் வங்கிக் கணக்குக்கு இந்த பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.