இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் மாபெரும் எதிர்ப்பு பேரணி.

இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானிய பேரரசின் மன்னரை நோக்கிய மாபெரும் கண்டன கரிநாள் பேரணியானது இன்றைய தினம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை சுதந்திரமடைந்த 76ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறும் ஒடுக்கு முறைக்கு எதிராகவும், வட்டுக்கோட்டை தீர்மானத்தை வலியுறுத்தி தன்னாட்சிக்கான உரிமைக்குரல் எனும் தொனிப்பொருளில் கரிநாள் போராட்டம் பிரித்தானிய தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரின் ஏற்பாட்டில் இன்று காலை 11மணியளவில் பிரித்தானியா இலங்கை தூதுவரகத்திலிருந்து ஆரம்பித்து பாராளுமன்ற முன்றலில் நிறைவுற்றிருந்தது.

குறித்த கரிநாள் பேரணியில் பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள்,பொது அமைப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad