கைது செய்யப்பட்டவர் கடற்படை வீரர் என மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கடற்படை சிப்பாய் நேற்று (22) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கங்கொடபிட்டிய, கஹபட்வல பிரதேசத்தில் வசிப்பவராவார்.
நேற்று (22) பிற்பகல் குறித்த சிறுமி பாடசாலை பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, பேருந்தில் இருந்த தனது மகள் யாரோ ஒருவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சிறுமியின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் நடவடிக்கை எடுத்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ள நிலையில் அவர் கடந்த 16ஆம் திகதி விடுமுறையில் வந்திருந்தமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று (23) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.