கிளிநொச்சியில் அம்மாவும் 16 வயது மகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக காரணமான யூரியூப்பர்.

கணவன் மலேசியாவுக்கு வேலை வாய்ப்பு பெற்று சென்று ஒரு வருடம் கழிந்த நிலையில் கிளிநொச்சி கல்மடுப்பகுதியில் 38 வயதான குடும்பப் பெண் ஒருவரும் அவளது 16 வயதான மகளும் ஒரே தடவையில் கர்ப்பமாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு பெண் பிள்ளைகளின் தாயாரான குறித்த பெண், படையினரின் விவசாயப் பண்ணையில் வேலை செய்து வந்துள்ளார். மூத்த பெண் பிள்ளை 15 வயதுடன் பாடசாலைக்கு செல்வதை கை விட்டுள்ளார். 12 வயதான இரண்டாவது பெண் பிள்ளை தற்போதும் பாடசாலைக்கு சென்று வருகின்றாள்.

கடந்த வருட முற்பகுதியில் கணவன் மலேசியா சென்ற பின்னர் பண்ணை வேலையை கைவிட்டு சுயதொழில் தொடங்கப் போவதாக கூறி யூரியூப்பர் ஒருவரிடம் தொடர்பு கொண்டு வெளிநாட்டு உதவி பெற்றுள்ளாள். கடந்த ஓகஸ்ட் மாதம் ஜேர்மன் நாட்டிலிருந்து வந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் குறித்த பெண்ணின் வீட்டுக்கு பல தடவைகள் யூரியூப்பருடன் வந்து சென்றுள்ளார்.

அதன் பின்னர் குறித்த பெண்ணும் அவளது இரண்டு மகள்களும் சில நாட்கள் வீட்டில் தங்காது ஜேர்மன் நபருடன் வாகனத்தில் திரிந்தாக அப்பகுதியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான நிலையில் குறித்த பெண்ணின் மூத்த மகள் திடீர் சுகவீனமடைந்துள்ளார்.

வாந்தி மற்றும் தலைச்சுற்றல் காரணமாக டெங்கு அச்சத்தில் மூத்த மகளை பரிசோதனை செய்த போது அவள் கர்ப்பமாக உள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே அறிகுறிகள் தாயாருக்கும் காணப்பட்டதால் அயலவர்கள் சந்தேகமடைந்து அவளையும் பரிசோதனைக்கு உள்ளாக்க முற்பட்ட போது தனது இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு தமது வீட்டிலிருந்து மாயமானதாக அயலவர்கள் கூறுகின்றார்கள்.

மகள் கர்ப்பமான தகவலை தாயாருக்கு வைத்தியர் தெரிவித்த போதும் தாயார் அதிர்ச்சியடையாமல் சாதாரணமாக இருந்ததாக அயலவர்கள் கூறுகின்றார்கள். தற்போது குறித்த குடும்பப் பெண்ணும் இரு பெண் பிள்ளைகளும் வவுனியாவுக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த யூரியூப்பர் ஒருவரே இவ்வாறான கேவலமான செயற்பாடுகளை புலம்பெயர் தமிழர்களை குளிர்விப்பதற்காக செய்து வருவதாகவும் உண்மையில் ஏராளமான கஸ்டப்பட்ட விசேட தேவையுடையவர்கள் இருக்கும் போதும் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு பெண்களை குறி வைத்து உதவி செய்வதாக கூறி அசிங்கமான செயற்பாடுகளை செய்துவருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad