வவுனியாவில் பாடசாலை மாணவி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா மாதர்பணிக்கர் மகிழங்குளம் பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவியே உயிரிழந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை (23) மாலை வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் . சம்பவத்தில் சிறிதரன் அனார்த்தினி வயது 16 என்ற மாணவியை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாணவியின் மரணத்திற்கு காதல் பிரச்சனை காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.