எல்பிட்டிய பிரதேசத்தில் சிறுமியொருவரை கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் குற்றச் செயலைச் செய்துவிட்டு தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று (12ஆம் திகதி) கைது செய்யப்பட்டுள்ளார்.
கரந்தெனிய, தல்கஹாவத்தை பகுதியைச் சேர்ந்த ஹன்சிகா நடிஷானி என்ற 17 வயதுடைய சிறுமியே தனது மூத்த சகோதரியின் கணவனால் கொல்லப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சுதேஷ் பிரியங்கர என்ற நபருக்கு கொலை செய்யப்பட்ட சிறுமியுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
சந்தேக நபர் அளித்த வாக்குமூலத்தில், சிறுமி வேறு ஒருவருடன் உறவில் இருந்ததால் கொலை செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
தனது சகோதரியின் இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு, க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருந்த சிறுமிக்கும், அத்தானுக்கும் காதல் ஏற்பட்டது. சிறுமியின் மூத்த சகோதரியையும், இரண்டு குழந்தைகளையும் கைவிட்ட அத்தான், சிறுமியுடன் ஓடிச்சென்று, பிறிதொரு பிரதேசத்தில் தலைமறைவாக வாழ்க்கை நடத்தியுள்ளார்.
4 மாதங்கள் இருவரும் குடும்பம் நடத்திய பின்னர், கடந்த மதம் தலாவ பகுதியிலுள்ள வீடொன்றை வாடகைக்கு பெற்று, அங்கு குடிவந்தனர். அத்தான் இல்லாத சமயத்தில் தனது தாயாருக்கு தொலைபேசியில் தகவல் வழங்கிய சிறுமி, அத்தான் இல்லாத சமயத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு இரு தரப்பினரும் அழைக்கப்பட்டிருந்தனர். கடந்த 8ஆம் திகதி பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்ற சிறுமி, அத்தானால் கடத்தி செல்லப்பட்டிருந்தார்.
பின்னர், 9ஆம் திகதி கழுத்து அறுத்து கொல்லப்பட்டிருந்தார்.