யாழில் டிப்பருடன் மோதிய எரிபொருள் தாங்கி.

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளானதில் எரிபொருள் வீதி முழுவதும் ஓடியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்து.

இதன் காரணமாக வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது .விபத்தில் மோதுண்ட இரு வாகனங்களும் தடம்புரண்டு சரிந்து விழுந்துள்ளன.

விபத்து காரணமாக எரிபொருள் தாங்கியில் இருந்த எரிபொருள் வீதி முழுவதும் கசிந்து காணப்படுகின்றது. மேலும் விபத்து சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad