கஞ்சாவுடன் கைதான கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் 3 கிலோகிராம் கேரள கஞ்சாவை கிளிநொச்சியிலிருந்து மாத்தறைக்கு பேருந்தில் கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறையில் உள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் இலங்கை பொலிஸ் விசேட பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவின் பெறுமதி ஒரு மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் எனவும், 2005ஆம் ஆண்டு முதல் பல வருடங்களாக சிறையில் இருந்தவர் எனவும், பின்னர் விடுவிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா கையிருப்பு தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் மாத்தறையில் உள்ள பொலிஸ் விசேட பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Below Post Ad

Tags