இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
வீதியில் இளவயதான ஆணொருவரை மோதிய பின்னர், பேருந்து தொடர்ந்து பயணித்தது. எனினும், பொலிசாரால் விரட்டிச் செல்லப்பட்டு பேருந்து மடக்கிப் பிடிக்கப்பட்டது.
விபத்தில் உயிரிழந்தவர் கிளிநொச்சி, உதயநகர் பகுதியை சேர்ந்தவர். அவர் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த போது, யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து மோதியது. அவர் ஏற்கெனவே கால் ஒன்றை இழந்தவர்.