யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர், சிகிச்சையின் இடையே வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியவர், வைத்தியசாலை பின்வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் தலையாழி பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் தினேஷ் என்ற 44 வயதானவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மூச்செடுக்க சிரமமாக இருப்பதாக குறிப்பிட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வேறொரு விடுதிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டபோதே இன்று மாலை வைத்தியசாலையின் பின்பக்க நுழைவாயில் ஊடாக தப்பிச் சென்றுள்ளார்.
விடுதியிலிருந்து வெளியேறி சிறிது நேரத்தில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
அதிகளவிலான மதுபான பாவனை காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.