இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தம்புத்தேகம,குடாகம மற்றும் புலத்சிங்கள ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 20, 23 மற்றும் 30 வயதுடையவர்களாவர்.
கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் தனது கழுத்தில் அணிந்திருந்த நகை திருடப்பட்டுள்ளதாக தெரிவித்த நிலையில், பஸ்ஸின் சாரதி அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு பஸ்ஸுடன் சென்றுள்ளார். .
இதன்போது, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.