இலங்கையில் பிரபல ஆடை நிறுவனமான (NOLIMIT) நிறுவனத்தின் ஆடை விற்பனை நிலையத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த ஆடையகத்தில் இருந்த பொதுமக்கள் உட்பட பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு விரைந்த கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மாலை ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இலத்திரனியல் கோளறு காரணமாகவே இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.