மொடலிங் துறைக்கு யுவதிகளை இணைத்துக் கொள்வதாக முகநூல் பக்கத்தில் விளம்பரம் செய்து, யுவதிகளை அறைகளுக்கு அழைத்து வந்து துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கண்டி ராஜவெல்லவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 15 யுவதிகள் இரகசிய பொலிஸில் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பிரனீத் லக்மால் என்ற சந்தேக நபர் இன்று (14) இரவு கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
அழகிய இளம் பெண்களை மொடலிங் வேலைக்கு சேர்த்துக் கொள்வதாக முகநூல் பக்கத்தில் விளம்பரம் செய்த சந்தேகநபர், தொடர்பு கொள்ளும் இளம் யுவதிகளின் படங்கள் வீடியோக்களை வற்புறுத்தி பெற்றுக் கொண்டுள்ளார்.
பின்னர், அவர்களின் கன்னித் தன்மையை பரிசோதிக்க ஒரு வைத்தியரிடம் நேர்காணலுக்கு பரிந்துரைத்துள்ளார்.
இதே சந்தேகநபர், பின்னர் அந்த வைத்தியராக நடித்து, யுவதிகளின் நிர்வாண புகைப்படங்களை எடுத்து, அச்சுறுத்தி, பல்வேறு வழிகளில் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, இரகசிய பொலிஸார் தெரிவித்தனர்.