இரு மாணவர்கள் விடுகைப்பத்திரம் கொடுத்து அனுப்பபட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம் யாழ் இந்து மகளீர் கல்லுாரிக்குள் புகுந்து கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்த மாணவர்களின் பெற்றோர் பாடசாலைக்கு வரவழைக்கப்பட்டு அவர்கள் யாழ் இந்து மகளீர் கல்லுாரியில் சிரமதானம் மேற்கொள்ள அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் யாழ் இந்து மகளீர் கல்லுாரிக்குள் குறித்த பெற்றோரை கல்லுாரி அதிபர் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து குறித்த பெற்றோர் யாழ் இந்துக்கல்லுாரிக்குள் சிரமதானத்தை மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது. யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் காவாலித்தனமாக செயற்படுவதற்கு பெற்றோரே முக்கிய காரணமாக உள்ளார்கள்.
பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு மோட்டார் சைக்கிள்கள் உட்பட பல்வேறு பொருட்களை வாங்கிக் கொடுத்து அவர்கள் காவாலிகளாக மாறுவதற்கு உறுதுணை புரிகின்றார்கள். பாடசாலைக்கு வெளியே மாணவர்களின் காவாலித்தனமான நடத்தைகளுக்கு முழுப் பொறுப்பும் கூற வேண்டியவர்கள் பெற்றோரே.
ஆகவே யாழ் இந்துக்கல்லுாரி அதிபர் குறித்த காவாலி மாணவர்களின் பெற்றோருக்கு கொடுத்த தண்டனை மிகவும் வரவேற்கத்தக்கது என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை குறித்த மாணவர்களின் பெற்றோர்களி்ல் சிலர் அரச அதிகாரிகளாக உள்ளதாகவும் அவர்கள் அதிபரின் நடவடிக்கையை பொறுக்க முடியாது கல்வி அமைச்சின் செயலாளரிடம் முறையிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே வேளை யாழ் இந்துக்கல்லுாரி அதிபர் கற்றல் நடவடிக்கையில் சிறப்பாக விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்காது விளையாட்டுக்களில் ஈடுபடும் மாணவர்களை ஊக்குவித்து வருகின்றார் எனவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.