இதே வேளை இவர் கணவரால் அடித்துக் கொல்லப்பட்டாரா என்பது தொடர்பாக சந்தேகம் நிலவுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றார்கள்.
குறித்த பெண் அவரது அயல்வீட்டுக்காரருடன் பேசுவதில்லை. இந்த நிலையில் இன்று அவரது வீட்டிலிருந்து சுமார் 30 மீட்டர்கள் தூரத்தில் உள்ள அயல்வீட்டுக்கு சென்று தண்ணீர் தருமாறு கேட்டு வாங்கி குடித்துவிட்டு தனது வீட்டுக்கு செல்வதற்கு வெளியே வந்துள்ளார்.
பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, கணவர் அவரை தாக்குவதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், தாயார் வழமையாக பாவிக்கும் மாத்திரைகளை விழுங்கிவிட்டு அயல்வீட்டுக்கு சென்றதாக அவரது மகள் தெரிவிக்கின்றார்.
இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்ற விபரங்கள் தெரியவராத நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.