மசாஜ் நிலையத்தில் இருந்து இளம் பெண்ணை கடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்.

குருவிட்ட பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் காணப்பட்ட பெண் ஒருவரை பலாத்காரமாக கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் பொலிஸ் புலனாய்வு பிரிவின் கான்ஸ்டபிள் ஒருவர் குருவிட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெற்றபோது சந்தேக நபருடன் காணப்பட்ட மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் சிரிபாகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்களாவர்.

பிரதான சந்தேக நபர் இரத்தினபுரி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இதேவேளை, பிரதான சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad