யாழ் இந்துக்கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதான மாணவன் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் மரணமான சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அனலைதீவைப் பிறப்பிடமாகவும், அரியாலை, யாழ்ப்பாணத்தை வாழ்விடமாகவும் கொண்ட கிருபானந்தன் கிரிசிகன் எனும் குறித்த மாணவன் வீட்டில் மாரடைப்பு காரணமாக மரணமானதாகத் தெரியவருகின்றது.