யாழில் காய்ச்சலால் உயிரிழந்த 5 வயதான சிறுமி.

 யாழ்ப்பாணம் – ஆவரங்கால் பகுதியில் காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியொருவர் போகும் வழியிலேயே இன்று உயிரிழந்துள்ளார்.

ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிதா என்ற 5 வயதான சிறுமியே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது…

சில தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி காய்ச்சல் காரணமாக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு சென்று வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் உடல் நிலை மோசமாகவே, பெற்றோர் சிறுமியை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு மீண்டும் கொண்டு சென்றபோதே சிறுமி உயிரிழந்துள்ளார்.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad