அராலி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் பல காலமாக மனநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். அதற்கான சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையிலே மதபோதகர் ஒருவர் இதனை குணப்படுத்துவதாக கூறியுள்ளார். அதனை நம்பி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவருக்கு நேற்றுமுன்தினம் வயிற்றுவலி ஏற்பட்டது.
இந்நிலையில் அவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடலத்தை புதைக்குமாறு கூறி, உடலம் நேற்றயதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடற்கூற்று பரிசோதனை முடிவுகள் கிடைத்ததும் எமது தளத்தில் மேலதிக விபரங்கள் வெளியாகும்.